scorecardresearch

TNEA COUNSELLING: பொறியியல் கவுன்சலிங் ஆக. 2-ம் தேதி தொடக்கம்; முழுப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ந் தேதி தொடங்குகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 7 அன்று தொடங்கும்.

Engineering
பொறியியல் கல்லூரி மாணவர்கள்

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அகஸ்ட் 2-ந் தேதி தொடங்கும் என்றும், ஜூன் 7-ந் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

தொடர்ந்து ஜூன் 7-ந் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜூன் 12-முதல் 30-ந் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதன்பிறகு ஜூலை 12-ந் தேதி மாணவர்களுக்காக தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 13- முதல் 20 வரை குறை தீர்வு முகாம்கள் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2-ந் தேதி சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

பொறியியல் படிப்புக்காக விண்ணப்ப பதிவை தொடங்கிய வைத்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ந் தேதி தொடங்குகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 7 அன்று தொடங்கும்.

மொத்தம் 4 கட்டங்களாக நடைபெறும் இந்த பொறியியல் கலந்தாய்வு அக்டோபர் 30-ந் தேதி வரை நடைபெறும். இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை 53% சதவிகிதமாக உள்ளது. இந்திய அளவில் முதல் 100 இடங்களில் தமிழகத்தில் இருந்து 18 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. சென்னை பல்கலைக்கழகம் உலக அளவில் 547 வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் 12 வது இடத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம் குறித்து ஆளுநர் தவறான புள்ளிவிவரத்தை சொல்லியுள்ளார். தமிழகத்தில் கல்வி சிறப்பாக உள்ளது என ஆளுநரே நிகழ்சிகளில் பேசியுள்ளார். கடந்த காலங்களில் பல்கலைக்கழங்களில் அரசியல் நுழையாமல் இருந்த நிலையில், தற்போது ஆளுநர் பல்கலைகழகங்களில் அரசியல் செய்கிறார். சனாதன கொள்கை தான் காலவதியான ஒன்று. திராவிட கொள்கை அல்ல. ஆளுநர் பதவிதான் காலவதியாக வேண்டிய ஒன்று’ என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu engineering counselling start on august 02

Best of Express