தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட் ஆஃப் குறையும் என கல்வியாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கு நல்ல மவுசு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் குறையும் என கல்வியாளர் அஸ்வின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், கணித பாடத்தில் மாணவர்களின் சென்டம் குறைந்துள்ளதால், கட் ஆஃப் கணிசமாக குறையப்போகிறது. 2022ல் 100க்கு 100 எடுத்தவர்கள் எண்ணிக்கை 132 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 60-65 மாணவர்களே சென்டம் எடுத்துள்ளனர். எனவே 0.5 அளவிற்கு கட் ஆஃப் குறையும்.
கடந்த ஆண்டில் 195க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 193.5க்கே கிடைக்கும். 190க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 188க்கே கிடைக்கும். 185க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 182க்கே கிடைக்கும். 180க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 176க்கே கிடைக்கும். 175க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 170க்கே கிடைக்கும். 170க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 164க்கே கிடைக்கும். 165க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 158க்கே கிடைக்கும்.
160க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 152க்கே கிடைக்கும். 155க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 146க்கே கிடைக்கும். 150க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 141க்கே கிடைக்கும். 140க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 133க்கே கிடைக்கும். 130க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 122க்கே கிடைக்கும்.
அதேநேரம் 120க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 120 இருந்தால் தான் கிடைக்கும். 110க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 115 இருந்தால் தான் கிடைக்கும். 100க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 108 இருந்தால் தான் கிடைக்கும். 90க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 100 இருந்தால் தான் கிடைக்கும். கடந்த ஆண்டில் 90-125 கட் ஆஃப்க்கு கிடைத்த கல்லூரிகள் இந்த ஆண்டு அதிகமாக இருந்தால் தான் கிடைக்கும்.