Advertisment

தமிழக மீன்வளத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறையில் வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக மீன்வளத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக மீன்வளத் துறையில் சாகர் மித்ரா வேலை வாய்ப்பு (படம்: மீன்வளத் துறை இணையதளம்)

தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் சாகர் மித்ரா பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சென்னைப் பல்கலை. வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சாகர் மித்ரா

கல்வித் தகுதி : இளங்கலை மீன்வள அறிவியல்/ கடல் உயிரியியல்/ விலங்கியல்/ தகவல் தொழில்நுட்பம் (Bachelor degree in Fisheries Science/ Marine Biology/ Zoology/ Chemistry/ Botany/ Biochemistry/ Microbiology/ Physics/ Information Technology (IT)) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 31.01.2023 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ.15,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரில் வழங்கலாம் அல்லது தபால் அனுப்ப வேண்டும்.

முகவரி: Office of the Assistant Director of Fisheries and Fishermen Welfare, No.77, S.N. Chetty Street, Royapuram, Chennai-13

விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2023/02/2023021483.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment