தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் சாகர் மித்ரா பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.06.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சாகர் மித்ரா
காலியிடங்களின் எண்ணிக்கை : 24
கல்வித் தகுதி : இளங்கலை மீன்வள அறிவியல்/ கடல் உயிரியியல்/ விலங்கியல்/ தகவல் தொழில்நுட்பம் (Bachelor degree in Fisheries Science/ Marine Biology/ Zoology/ Chemistry/ Botany/ Biochemistry/ Microbiology/ Physics/ Information Technology (IT)) படித்திருக்க வேண்டும். அல்லது 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 31.12.2023 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.15,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரில் வழங்கலாம் அல்லது தபால் அனுப்ப வேண்டும்.
முகவரி: Office of the Assistant Director of Fisheries and Fishermen Welfare, No.77, S.N. Chetty Street, Royapuram, Chennai-13
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.06.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“