scorecardresearch

தமிழ்நாடு வனத்துறை வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு வனத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு வனத்துறை வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு வனத்துறை வேலை வாய்ப்பு

தமிழ்நாடு வனத்துறையின் கீழ் செயல்பட்டு வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30.01.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை. வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

முதுநிலை ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow)

காலி இடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E Computer Science/ B.Tech Information Technology/ M.Sc Computer Science படித்திருக்க வேண்டும். மற்றும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 28 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST/BC/MBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 31,000

ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant)

காலி இடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.Sc in Wildlife Biology/ Marine Biology படித்திருக்க வேண்டும். மற்றும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 28 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST/BC/MBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 20,000

முதுநிலை ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow)

காலி இடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.Sc/ M.Tech in BioTechnology/ Molecular Biology/ Genetics/ Genetic Engineering. மற்றும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 28 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST/BC/MBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 35,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.aiwc.res.in/assets/images/pdf/20230120195622.pdf என்ற இணையதளத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Principal Chief Conservator of Forests and Director, AIWC (R,T & E), Vandalur, Chennai – 600048

விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.aiwc.res.in/assets/images/pdf/20230120195622.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu forest department jobs 2023 apply soon