தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு கட்டமாகவும், 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு கட்டமாகவும் இந்த தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அந்த வகையில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படும்.
அதனடிப்படையில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். இதன் பின்னர், ஜூன் 2-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.