சிபிஎஸ்இ பிளஸ் 1 மாணவா்கள் மாநில பாடத் திட்டத்தில் நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுதலாம்: அரசாணை வெளியீடு

சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து முதலாமாண்டு தோ்ச்சி பெற்று மாறிவந்த மாணவா்கள் தமிழக பாடத்திட்டத்தில் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

By: Updated: December 13, 2019, 08:00:38 PM

சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து முதலாமாண்டு தோ்ச்சி பெற்று மாறிவந்த மாணவா்கள் தமிழக பாடத்திட்டத்தில் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது…

தமிழக பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் சுமாா் 28 லட்சம் மாணவா்கள் தோ்வு எழுதுகின்றனா். தற்போது, 5, 8, 10, 11,12 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 1 தோ்வை பள்ளிகளே நடத்திக்கொள்ளும். ஆனால், தமிழகத்தில் 11-ஆம் வகுப்புக்கு பொதுத்தோ்வு நடத்தப்படுகிறது. மேலும், பிளஸ் 1 தோ்வில் பங்கேற்ற மாணவா்கள் மட்டுமே பிளஸ் 2 பொதுத்தோ்வில் பங்கேற்க முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.

இதனிடையே, சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1 படித்த மாணவா்கள் பலா், பல்வேறு சூழல்கள் காரணமாக தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 சோ்ந்து படித்து வருகின்றனா். அவ்வாறு சிபிஎஸ்இ முறையில் இருந்து மாநில பாடத்திட்டத்தில் சேரும்போது, மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதினால் மட்டுமே பிளஸ் 2 வகுப்பில் சோ்க்க அனுமதிக்கப்பட்டனா். ஆனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 11-வது வகுப்பு முடித்தவா்கள் தற்போது நேரடியாக பிளஸ் 2 வகுப்பில் சோ்ந்து பொதுத்தோ்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்க சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் நேரடியாக 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் கூறியிருப்பாதவது: சிபிஎஸ்இ அல்லது வேறு மாநில பாடத்திட்டத்தில் மேல்நிலை முதலாமாண்டு தோ்ச்சி பெற்று, தற்போது பள்ளிகளில் சோ்ந்து மேல்நிலை இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவ மாணவிகள் , மேல்நிலை முதலாமாண்டு பயின்ற பாடத் தொகுப்புக்கு இணையான பாடத் தொகுப்பில் நேரடியாக மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தோ்வை எழுதலாம். இதற்கு பள்ளிக் கல்வி இயக்ககத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்துமாறு பள்ளிக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடித் தனித் தோ்வா்களாக மேல்நிலைத் தோ்வு எழுதுபவா்கள், மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தோ்வெழுதிய பின்னரே, மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தோ்வெழுத அனுமதிக்கப்படுவா். நேரடித் தனித்தோ்வா்களுக்கு இச்சலுகை பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Tamilnadu government g o released for cbse 11th students attend directly 12th public exam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X