தமிழக அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) ஒரு பாடத் திட்டமாக அடுத்த ஆண்டு முதல் கொண்டுவர தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு அறிவியலை மாணவர்களிடம் கொண்டு செல்வதற்காக பெரிய தொழிநுட்ப நிருவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் போன்றவைகளிடம் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இதுநாள் வரையில், தமிழக அரசுப் பள்ளிகளில் அவ்வப்போது செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு முகாம் போன்றவைகள் மூலமாக மாணவர்களிடம் கொண்டு சேர்த்திருந்தனர். ஆனால்,தற்போது அதை பாடத் திட்டமாகவே மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்ட தொடக்கமாக, ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடத்திட்டம் அமைய விருக்கிறது.
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற உயர் தொழில் நுட்பங்களை, தனியார் பள்ளிகள் தத்தம் மாணவர்களுக்கு கிடைக்கும் சூழலை உருவாக்கி கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அதுபோன்ற வாய்ப்பை உருவாகித் தரவேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை விரும்புகிறது.
இவ்வகையான பாடத்திட்டங்கள் தேவையான கட்டமைப்பை அரசுப் பள்ளிகள் முதலில் கொண்டு வரவேண்டும். உதரணமாக, கடந்த ஆண்டு தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள வகுப்பற்றையை உயரத் தொழிநுட்பமிக்கதாக மாற்ற தமிழக அரசு 462.62 கோடியை ஒதுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம், நல்ல முறையில் அமல்படுத்தப்பட்டால் தனியார் பள்ளிகளுக்கு இணங்க அரசுப் பள்ளிகளும் மாணவர்களின் தொழிநுட்ப திறன்களை மேம்படுத்த முடியும்.