தமிழக அரசு வேலை; கிராம உதவியாளர் பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamilnadu government village assistants vacancies apply soon: தமிழக அரசில் கிராம உதவியாளர் பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழக அரசின் வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தாலுகாவில் உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப, தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கீழ்வேளூர் வட்டாட்சியர் அறிவித்துள்ளார். மொத்தம் 19 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021

பதவியின் பெயர் : கிராம உதவியாளர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 19

வயதுத் தகுதி : 21 முதல் 35 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு வயது தளர்வு உண்டு.

கல்வித் தகுதி : குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 11,000 – 35,000

தேர்வு முறை: கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்கான சான்று நகல், சாதிச் சான்று நகல், இருப்பிடச் சான்று நகல், வருமானச் சான்று நகல், முன்னுரிமை கோருவதற்கான சான்று நகல், வேலைவாய்ப்பு பதிவுச் சான்று நகல், ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் 09.09.2021 மாலை 5 மணிக்குள் வட்டாட்சியர், கீழ்வேளூர் என்ற முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.nagapattinam.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu government village assistants vacancies apply soon

Next Story
காரைக்குடி மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com