யூடியூப் சேனல் தொடங்க வேண்டுமா? அரசு சார்பில் சான்றிதழுடன் இலவச பயிற்சி : விண்ணப்பிப்பது எப்படி?

இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் யூடியூப் சேனல் நடத்துவது எப்படி என்பது குறித்து இலவச பயிற்சியும் அதற்கான சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் யூடியூப் சேனல் நடத்துவது எப்படி என்பது குறித்து இலவச பயிற்சியும் அதற்கான சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Youtube watch and search history

யூடியூப் சேனல் தொடங்க அரசு பயிற்சி

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

சமூகவலைதளங்களில் முன்னணியில் இருக்கும் யூடியூப் மூலம் பல தொழிலதிபர்கள் உருவாகியுள்ள நிலையில், பலரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் வாய்ப்பு பெற்று வருகிறது. இதனை இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் யூடியூப் சேனல் நடத்துவது எப்படி என்பது குறித்து இலவச பயிற்சியும் அதற்கான சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

Advertisment

உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 29.01.2024 முதல் 31.01.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல். சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது. பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் - மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.

Advertisment
Advertisements

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சிட்கோ தொழிற்பேட்டை பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை600 032. 44-22252081/22252082, 8668102600/8668100181/7010143022.முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Youtube

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: