Advertisment

தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை வேலை; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையில் முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு திட்டத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 45 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jobs

அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையில், முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு திட்டத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையில், முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பசுமைத் தோழர்கள், திட்ட நடத்துனர், இணை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 45 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 15.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; ரூ60,000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க!

Green Fellows

காலியிடங்களின் எண்ணிக்கை: 40

கல்வித் தகுதி : இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 60,000 + 15,000

Programme Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 85,000

Research Associate

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 35,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.environment.tn.gov.in/cmgfp என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.environment.tn.gov.in/cmgfp என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment