பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளித்ததைப் போல், இந்த ஆண்டு முதல் பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், இதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ளதைக் கண்டறிந்த அரசு, இதற்கான காரணங்களை அறிய நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைத்தது. நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆணையத்திடம், அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவுக்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வுகளை பரிந்துரைக்குமாறு அரசு கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில், நீதிபதி முருகேசன் ஆணையம் அளித்த பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டது. அதன் படி தொழிற்கல்வி படிப்புகளான பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil