scorecardresearch

செய்தி மக்கள் தொடர்புத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறை வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

செய்தி மக்கள் தொடர்புத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!
tn govt jobs

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: அறநிலையத்துறை வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிங்க!

ஓட்டுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2021 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.19,500 – 62,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை – 600009

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu govt dipr jobs 2022 in chennai apply soon