Advertisment

தமிழக அரசு வேலை; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamilnadu Govt Economics and Statistics Dept Office Assistant vacancies: தமிழக அரசில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்; 8 வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
கரூர் மாவட்ட TNSRLM வேலைவாய்ப்பு; 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக அரசின், சென்னை அண்ணா சாலை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2021

அலுவலக உதவியாளர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 11

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் இளநிலை பட்டம் வரை

வயதுத் தகுதி : 01.03.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகப்பட்ச வயது வரம்பு SC/SCA/ST பிரிவுகளுக்கு 35 வயதும், BC பிரிவுக்கு 32 வயதும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://des.tn.gov.in/sites/default/files/2021-10/ApplicationTamilnew_0.pdf  அல்லது https://des.tn.gov.in/sites/default/files/2021-10/Application%20Format%20English_0.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : ஆணையர், பொருள் இயல் மற்று புள்ளி இயல் துறை, எண் 259, அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை – 600006.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.10.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://des.tn.gov.in/node/407 என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment