தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குருப் VII-A பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு -1 நிர்வாக அதிகாரி பதவிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு ஆன்லைன்முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இந்து அறநிலைய அறக்கட்டளைச்சட்டம் 1959-ன் படி இந்து மதத்தை பின்பற்றும் நபர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
காலிப்பணியிடங்களின் விபரங்கள் :
நிர்வாக அதிகாரி கிரேடு -1 – தமிழ்நாடு இந்து அறநிலைய அறக்கட்டளை துணை சேவை
காலி பணியிடங்களின் எண்ணிக்கை
எம்பிசி/ டிசி (ஏசி) சிஎஃப் – 4
சம்பள விபரம் :
ரூ 37,700 1,19,500
அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் தோராயமானது. இதை மாற்றியமைக்கவும் வாய்ப்புள்ளது. வகுப்பு வாரியான காலிப்பணியிடங்களில் பொது பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவுகளில் தலா ஒரு காலிஇடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
ஜனவரி 21 (இன்று) அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்வரி 21 என கூறப்பட்டுள்ளது.
வயது தகுதி :
அனைத்து பிரிவினருக்கும் 30 வயதை கடந்திருக்க வேண்டும். இதில் பொது பிரிவினருக்கு 35 வயதுக்கு மேல் விண்ணப்பிக்க முடியாது. மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை :
இந்த தேர்வுக்கு தமிழ் பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 தாள்கள் தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது. முதலில் ஏப்ரல் 23-ந் தேதி தமிழ் தாள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். அதன்பிறகு இந்து சமய மற்றும் அறப்பணிகள் சட்டம் தொடர்பாக தேர்வு மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும்.
தொடர்ந்து அடுத்த நாள் ஏப்ரல் 24-ந் தேதி சட்டம் தொடர்பான தேர்வு நடைபெறும். இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு நிறைவடையும்.
கல்வித்தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் கலை, அறிவியல் அல்லது வணிகவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் பல்கலைகழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்
5 ஆண்டுகளுக்கு குறையாமல், சமய நிலைய ஊழயர்களுக்கு (அரசு ஊழியர்களை தவிர) முன்னுரிமை அளிக்கப்படும். கல்வித்துறை மற்றும் தொல்லியல் துறையில், தமிழ்நாட்டின் கல்வெட்டு நிறுவனத்தால் வழங்கப்படும் டிப்ளமோ பெற்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கட்டண விபரம்
ஒருமுறை பதிவு முறையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 150 ரூபாய் கட்டணமாக பெறப்படும். இந்த பதிவுமுறை 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன்பிறகு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி பதிவுமுறையை புதுப்பித்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்படம் சமர்பிக்கும்போது தேர்வுக்கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil