பல மாநில போட்டித் தேர்வுகளுக்கு கட்டாயம் ஆபிஸ் ஆட்டோமேஷன் குறித்த கணினியில் சான்றிதழ் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் விதிகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. உயர்கல்வித் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட மனிதவள மேலாண்மைத் துறையின் சமீபத்திய கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து உயர்கல்வித் துறை செயலர் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில்,
கணினி மற்றும் அலுவலக ஆட்டோமேஷன் சான்றிதழ் பாடத்திட்டத்தில் தட்டச்சு திறன் (டைப்பிங்) பாடத்திட்டத்தில் சேர்க்கவும், ஜூனியர் தேவையை நீக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உயர் தர தட்டச்சு பாடத்தில் இணைவதற்கு முன்-தேவையான தகுதி குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DOTE) வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் மற்றும் விதிகளின்படி, கணினி மற்றும் அலுவலக ஆட்டோமேஷன் கருவிகள் (தாள்-I) 60 நிமிட கால அளவு கொண்ட தியரி தேர்வு 50 மதிப்பெண்களைக் கொண்டிருக்கும்.
அதேபோல், போட்டித் தேர்வுகளின்படி, தமிழ் தட்டச்சு மற்றும் வேகத் திறன் தேர்வு, நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் (தாள்-III) 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தாள் IV கணினி மற்றும் அலுவலக ஆட்டோமேஷனில் நடைமுறைச் சோதனைகளை பற்றியதாகவும், அவை 60 நிமிட கால அளவு மற்றும் 50 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடத்தப்படும். தாள் I முதல் தாள் III வரையிலான டிஜிட்டல் மதிப்பீட்டு தொகுதிகள் கொண்ட இணையதள விண்ணப்பம் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் மற்றும் தாள் IV க்கு திரை டிஜிட்டல் மதிப்பீடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“