தமிழ்நாடு அரசு மருத்துவதுறையில் 555 மருந்தாளுநர் மற்றும் மருத்துவ சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள சித்தா, ஆயுர்வேதம், யுனானி, மற்றும் ஹோமியோபதி மருத்துவமனைகளில் மருந்தாளுநர் மற்றும் மருத்துவ சிகிச்சை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள், தேசிய ஊரக மருத்துவ திட்டத்தின் மூலம் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிமாக நிரப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25 ஆம் தேதி கடைசி தேதியாகும்.
மருந்தாளுநர் (அ) மருந்து வழங்குபவர் (Dispenser)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 420
கல்வித் தகுதி: டிப்ளமோ மருந்தாளுநர் (சித்தா, ஆயுர்வேதம், யுனானி, மற்றும் ஹோமியோபதி) Diploma in Pharmacy ( Siddha/ Unani/ Ayurvedha / Homoeopathy) / Diploma in Integrated Pharmacy
வயதுத் தகுதி: 18 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: தினசரி ரூ. 750 (தினசரி ஆறு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்)
தேர்வு முறை:
இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வோ நேர்முகத் தேர்வோ கிடையாது. டிப்ளமோ மற்றும் பள்ளி படிப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவீர்கள்.
டிப்ளமோ பார்மசியில் பெற்ற மதிப்பெண்களில் 50%, 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் 30% மற்றும் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் 20%, இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
மருத்துவ சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant)
மொத்த காலியிடங்கள்: 135 (ஆண்கள்- 53, பெண்கள்- 82)
கல்வித் தகுதி: Diploma in Nursing Therapy
வயதுத் தகுதி: 18 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: தினசரி ரூ. 375 ஒரு சிகிச்சைக்கு (தினசரி ஆறு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்)
தேர்வு முறை
இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வோ நேர்முகத் தேர்வோ கிடையாது. டிப்ளமோ மற்றும் பள்ளி படிப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவீர்கள்.
டிப்ளமோ நர்சிங் தெரபியில் பெற்ற மதிப்பெண்களில் 50%, 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் 30% மற்றும் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் 20%, இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு https://tnhealth.tn.gov.in/ என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்கவும்.
Director of Indian Medicine and Homoeopathy,
Arumbakkam, Chennai -106
விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்வதற்கான இணைய முகவரி
மருந்து வழங்குபவர்: https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082957.pdf
சிகிச்சை உதவியாளர்: https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082956.pdf
தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 25, மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil