வேலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூரில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் முதன்முறையாக சேர்க்கை உற்பத்தி (Additive Manufacturing) ஆய்வகங்கள் நிறுவப்படும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தற்போது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட வேறு சில நிறுவனங்களில் மட்டுமே சேர்க்கை உற்பத்தி ஆய்வகங்கள் உள்ளன.
இந்தநிலையில், வேலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூரில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை உற்பத்தி ஆய்வகங்கள் நிறுவப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மூன்று பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை உற்பத்தி ஆய்வகங்களை அமைப்பதற்காக தலா ரூ. 1 கோடி என அரசு ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆய்வகங்கள் மாநிலத் தொழில் துறை மற்றும் கல்வியாளர்களின் உதவியுடன் செயல்படும்.
இந்த ஆய்வகம் மாணவர்களுக்கு கணினி உதவி வடிவமைப்பு (CAD) தரவுகளிலிருந்து 3டி (3D) மாதிரிகளை உருவாக்குவதற்கான சூழலை வழங்குகிறது. 3டி பிரிண்டிங் மற்றும் சேர்க்கை உற்பத்தி என்பது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம், அங்கு தயாரிக்கப்படும் ஒரு தயாரிப்பு அனைத்து வழக்கமான உற்பத்தி தொழில்நுட்பங்களை விட மிக எளிதாகவும் வேகமாகவும் இருக்கும். பல உற்பத்தித் தொழில்கள் ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு மற்றும் பயோமெடிக்கல் பயன்பாடுகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளில் பல்வேறு 3டி பிரிண்டிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன என்று உயர்கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாக டிடி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆய்வகத்திலும் 3டி பிரிண்டர்கள், ஒரு கணினி எண்ணியல் கட்டுப்பாடு (CNC) சிமுலேட்டர், CAD மென்பொருள், 3D ஸ்கேனர்கள் மற்றும் லேசர் வெட்டி மற்றும் செதுக்கி ஆகியவை அமைக்கப்படும். இவை தற்போதைய தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும். 3டி ஸ்கேனர்கள், 3டி பிரிண்டர்கள் மற்றும் CAD பேக்கேஜ்களின் செயல்பாட்டு பயன்பாட்டில் ஈடுபட்டுள்ள பொறியாளர்களுக்கும் மற்றும் இந்தப் பகுதியில் உள்ள மற்றவர்களுக்குப் பயிற்சி அளிக்க விரும்புவோருக்கும், அறிவு மற்றும் திறன்களை விரிவுபடுத்துவதையும் மேம்படுத்துவதையும் இந்த ஆய்வகங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினார்.
மெக்கானிக்கல், மெக்கட்ரானிக்ஸ், மேனுபாக்சரிங் மற்றும் புரொடொக்சன் இன்ஜினியரிங் ஆகியவற்றைப் படிக்கும் மாணவர்கள், சேர்க்கை உற்பத்தி ஆய்வகங்களால் பரவலாகப் பயனடைவார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.