இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; 8 முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamilnadu HR&CE notification for various jobs: இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; தேர்வு கிடையாது; சென்னையில் நேர்காணல்; தகுதியுள்ளவர்கள் கலந்துக் கொள்ளலாம்!

இந்து சமய அறநிலையத்துறையில் உதவிப் பேராசிரியர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை கொளத்தூரில் புதிதாக தொடங்கியுள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உதவிப் பேராசியர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியுள்ளவர்கள் 18.10.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

உதவிப் பேராசிரியர்

B.com, B.B.A, B.Sc (computer science), B.C.A, Tamil, English, Mathematics, Physical Director, Librarian உள்ளிட்ட துறைகளில் உதவிப் பேராசியர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட துறைகளில் P.hd அல்லது முதுகலைப்படிப்பு முடித்தவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

நேர்காணல் தேர்வு நடைபெறும் இடம் : அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எவர்வின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, S.J.அவென்யூ, கொளத்தூர், சென்னை -99

நேரம் : 18.10.2021 காலை 10 மணி

உதவியாளர் அல்லது நிதியாளர்

காலியிடம் – 1

கல்வித் தகுதி : பி.காம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர் அல்லது தட்டச்சர்

காலியிடம் – 1

கல்வித் தகுதி : S.S.L.C முடித்திருக்க வேண்டும், ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு சீனியர் கிரேடு தேர்ச்சி அல்லது தமிழ் தட்டச்சு சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலம் ஜூனியர் கிரேடு தேர்ச்சி

அலுவலக உதவியாளர்

காலியிடம் – 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

காவலர்

காலியிடம் – 3

கல்வித் தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

துப்புரவாளர்

காலியிடம் – 2

கல்வித் தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பெருக்குபவர்

காலியிடம் – 2

கல்வித் தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

நேர்காணல் தேர்வு நடைபெறும் இடம் : அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எவர்வின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, S.J.அவென்யூ, கொளத்தூர், சென்னை -99

நேரம் : 18.10.2021, பிற்பகல் 2 மணி

இந்த பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள், தேவையான ஆவணங்களுடன் மேலே குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்துக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu hrce notification for various jobs

Next Story
தேசிய திறனறிதல் தேர்வு 2021; விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் யார்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X