கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வேலை; பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamilnadu Kudankulam nuclear power plant recruitment 2021 apply soon: தமிழ்நாட்டில் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வேலை; ரூ.61000 சம்பளம்; பொறியியல் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் சிவில் மற்றும் மெக்கானிக் பிரிவுகளில், பொறியியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், இந்திய அணு சக்தி கழகத்தின் கீழ் இயங்கும், கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 34 பொறியாளர் (Fixed Term Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியலில் சிவில் மற்றும் மெக்கானிக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.09.2021

கட்டிட பொறியாளர் (Fixed Term Engineer – Civil)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 24

வயதுத் தகுதி: 18.09.2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.இ அல்லது பி.டெக் படிப்புகளில் சிவில் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 61,400

இயந்திர பொறியாளர் (Fixed Term Engineer – Mechanical)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 10

வயதுத் தகுதி: 18.09.2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.இ அல்லது பி.டெக் படிப்புகளில் மெக்கானிக்கல் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 61,400

தேர்வு முறை: விண்ணப்பங்களின் வருகைக்கேற்ப எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இருக்கும்.

எழுத்து தேர்வில், சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் (சிவில் அல்லது மெக்கானிக்கல்) 100 வினாக்கள் கேட்கப்படும்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://npcilcareers.co.in/MainSite/default.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு 18.09.2021 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

முகவரி,

Senior Manager (HRM), HRM section, Kundankulam Nuclear Power Project, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli District, Tamilnadu – 627106.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu kudankulam nuclear power plant recruitment 2021 apply soon

Next Story
TNPSC Recruitment; தமிழ்நாடு அரசு வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com