scorecardresearch

நில அளவை உரிமம் பெற பயிற்சி வாய்ப்பு; ஐ.டி.ஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு நில அளவை உரிமம் வழங்க பயிற்சிக்கான வாய்ப்பு; ஐ.டி.ஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நில அளவை உரிமம் பெற பயிற்சி வாய்ப்பு; ஐ.டி.ஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் நில அளவைத்துறை, நில அளவையில் உரிமம் வழங்குவதற்கான 3 மாத பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு நில அளவை உரிமம் வழங்குவதற்கான பயிற்சியை நில அளவைத்துறை அறிவித்துள்ளது. ஐ.டி.ஐ முதல் இன்ஜினியரிங் வரை படித்தவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022

இதையும் படியுங்கள்: TNPSC வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பயிற்சி விவரங்கள்

நில அளவை (Land Surveying)

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை : 125

கல்வி தகுதி: B.E (Civil Engineering), B.E (Geo – Informatics), M.Sc (Geography), M.Sc (Earth Remote sensing and Geo Information Technology) or Diploma in Civil Engineering or ITI trade

பயிற்சி கால அளவு: 3 மாதங்கள்

பயிற்சி கட்டணம் : ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை: அந்த கல்வி படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை: இந்த பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க https://tnlandsurvey.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Principal/ Joint Director (Training), Survey Training Institute, Orathanadu – 614625, Thanjavur District.

விண்ணப்பக்க கட்டணம் : ரூ. 500

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tnlandsurvey.tn.gov.in/  என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu land surveying training for diploma iti engineering graduates