மருதமலை முருகன் கோவில்… இந்து அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!

Tamilnadu Job Requirement Update : மருதமலை முருகன் கோவிலில் காலி பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச்‌ சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

கோவை மாவட்டம்‌, பேரூர்‌ வட்டம்‌, மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்‌. அமைக்கப்படவுள்ள மருத்துவ முதலுதவி மையத்தில்‌ மருத்துவ அலுவலர்‌ மற்றும்‌ செவிலியர்‌ பதவிகளுக்காக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச்‌ சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாகவும், 10.11.2021 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள்‌ வந்துசேர அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர விபரங்களை திருக்கோயில் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அல்லது அலுவலகத்தில் அலுவலக நாட்களில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

வேலைக்கான விவரங்கள் :

வேலையின் பெயர் : மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்

காலி பணியிடங்கள் : 6

இதில் மருத்துவ அலுவலர் 2, செவிலியர் 2, பல்நோக்கு மருத்துவர் 2

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-11-2021 மாலை 5.45 மணி வரை (அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்)

கல்வித்தகுதி : மருத்துவ அலுவலர் எம்பிபிஎஸ் படித்திருக்க வேண்டும். செலிவியர் நர்சிங் படித்திருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவ உதவியாளர் 8-ம் வகுப்பு தேர்ச்சி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய முகவரி : துணை ஆணையர்‌ / செயல்‌ அலுவலர்‌, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்‌, மருதமலை, பேரூர்‌ வட்டம்‌, கோவை மாவட்டம்‌ – 641046. தொலைபேசி எண்‌. 0422-2422490.

சுப்ரமணிய சுவாமி கோவிலில் வேலைவாய்ப்பு நிபந்தனைகள்‌:

இந்துமதத்தைச்‌ சார்ந்தவராகவும்‌ தமிழ்நாட்டை சார்ந்தவராகவும்‌ இருக்க வேண்டும்‌.

தொற்றுநோய்‌ உடல்‌ அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள்‌ உள்ளவர்கள்‌ விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்‌.

நீதிமன்றத்தில்‌ தண்டனை அடைந்தவர்கள்‌

பட்டகடனை தீர்க்க முடியாதவர்கள்‌ என நீதிமன்றத்தில்‌ தீர்மானிக்கப்பட்டவர்கள்‌

அரசுப்பணிகள்‌, பொது ஸ்தாபனங்கள்‌ மற்றும்‌ வேறு இடங்களில்‌ பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம்‌ செய்யப்பட்டவர்கள்‌. ஆகியோர்கள்‌ மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத்‌ தகுதியற்றவர்கள்‌.

நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும்‌. இதற்கு அரசிதழ்‌ பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச்‌ சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்‌.

இந்து சமயத்தைச்‌ சார்ந்த நபர்களிடமிருந்து 10.11.2021 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றிதழ்கள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்பும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத்தேர்வு அறிவிப்பு அனுப்பப்படும்.

நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டவை

விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோகியம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருத்தல் வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது.

விண்ணப்பங்களுக்கு கட்டணம்‌ கிடையாது.

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://www.tnhrce.gov.in/ என்கிற இணையதள முகவரியில்‌ அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்‌ பெயரில்‌ உள்ள பக்கத்தில்‌ விண்ணப்பங்கள்‌ ஆன்லைன்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

அதற்கு பின்னர்‌ வரப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படமாட்டாது. இதர விபரங்களை அலுவலகத்தில்‌ அலுவலக நாட்களில்‌ அலுவலக நேரத்தில்‌ நேரில்‌ கேட்டுத்‌ தெரிந்து கொள்ளலாம்‌ மற்றும்‌ திருக்கோயில்‌ இணையதளத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

துணை ஆணையர்‌ / செயல்‌ அலுவலர்‌, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்‌, மருதமலை, பேரூர்‌ வட்டம்‌, கோவை மாவட்டம்‌ – 641046. தொலைபேசி எண்‌. 0422-2422490.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu maruthamalai murugan temple job requirement update

Next Story
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; 312 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!Tamilnadu news in tamil: 11 TN universities to offer online degrees from next academic year
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X