எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேருவதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. டாப் ரேங்கில் உள்ள தமிழக மாணவர்கள் அகில இந்தியா கோட்டாவை தேர்வு செய்தால், மாநில கோட்டாவில் கூடுதலாக மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேருவதற்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேருவதற்கான கட் ஆப் ஓ.சி பிரிவில் 20 மதிப்பெண்கள் அதிகரித்துள்ளது. மற்ற பிரிவினரின் கட் ஆப் 40 மதிப்பெண்கள் உயர்ந்துள்ளது. 2022ம் ஆண்டை விட அதிக மதிபெண்களை பெற்று மாணவர்கள் டாப் ரேங்கில் உள்ளனர்.
இந்த ஆண்டு 29 மாணவர்கள் மொத்த மதிப்பெண்720-க்கு 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 2022ம் ஆண்டு 5 பேர் மட்டுமே 700 -க்கு அதிகமான மதிப்பெண் பெற்றனர். 2021-ல் 9 பேர் 700-க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றனர்.
379 மாணவர்கள் 600-க்கு அதிமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 2022ம் ஆண்டு 199 மாணவர்கள் மட்டுமே 600-க்கு அதிகமான மதிபெண்கள் பெற்றனர்.
6,449 மாணவர்கள் 500 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்திய அளவில் 720 மதிப்பெண் பெற்று பிரபஞ்சன் முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து 715 பெற்று சூரிய சித்தார்த் மற்றும் வருண் தமிழக அளவில் 2 ம் இடத்தை பிடித்துள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு 1,170 மாணவர்கள் 300-க்கு அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 250 மாணவர்கள் மட்டுமே 300-க்கு அதிகமான மதிப்பெண்களை பெற்றனர்.
அரசு மருத்துக் கல்லூரிகளில் சேருவதற்கான இந்த ஆண்டு கட் ஆப் ( ஓ.சி பிரிவு) 600-க்கு அதிக மதிப்பெண்கள் வேண்டும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் 20 மதிப்பெண்கள் அதிகரித்துள்ளது. பி.சி பிரிவின் கட் ஆப் 25 மதிப்பெண்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதனால் மத்திய பல்கலைக்கழங்களில் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். இந்திய அளவில் டாப் 10 இடங்களில் 4 இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்துள்ளனர்.
டாப் ரேங்கில் உள்ள மாணவர்கள் அகில இந்தியா கோட்டாவை தேர்வு செய்தால், மாநில கோட்டாவில் கூடுதலாக மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.