Tamilnadu MBBS Admission: எம்.பி.பி.எஸ் விண்ணப்ப பதிவு தொடக்கம்; இந்த ஆவணங்களை ரெடியா வச்சுக்கோங்க!

தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்; விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் பட்டியல் இங்கே

தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்; விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
New Update
mbbs students

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம். 

Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கு நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம் என்ற நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் மாணவர்கள் சிரமமின்றி விண்ணப்பிக்கும் வகையில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 2 ஆம் வாரத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், முடிவுகள் வெளியான பின்னர் அதனை அப்டேட் செய்துக் கொள்ளலாம். மேலும் நீட் தேர்வு வெளியான பின்னரும் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை இப்போது பார்ப்போம். இதனை மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் விளக்கியுள்ளார்.

Advertisment
Advertisements

1). நிரந்தர மொபைல் எண் மற்றும் கூடுதலாக ஒரு மொபைல் எண்

2). மின்னஞ்சல் முகவரி

3). பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

4). கையொப்பம் 

5). 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

6). 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

7). சாதிச் சான்றிதழ்

8). அரசுப் பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் (தேவைப்படின்)

9). சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகளுக்கு தேவையான சான்றிதழ்

10). நீட் அட்மிட் கார்டு

11). நீட் மதிப்பெண் அட்டை

NEET Exam Mbbs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: