/tamil-ie/media/media_files/uploads/2023/06/MBBS.jpg)
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், 7.5% இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கு நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம் என்ற நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் மாணவர்கள் சிரமமின்றி விண்ணப்பிக்கும் வகையில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 2 ஆம் வாரத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், முடிவுகள் வெளியான பின்னர் அதனை அப்டேட் செய்துக் கொள்ளலாம். மேலும் நீட் தேர்வு வெளியான பின்னரும் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், 7.5% இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்.ஜி.ஆர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் கோவிந்தராஜ் விளக்கியுள்ளார்.
மாற்றுத்திறனாளி பிரிவினர் அதற்குரிய சான்றிதழை சமர்பிக்க வேண்டும். தமிழக மாணவர்களுக்கு சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்த சான்றிதழ் வழங்கப்படும். ஆனால், அங்கு சான்றிதழ் தற்போது வழங்கப்படவில்லை. ஆனால் மாணவர்கள் ஏற்கனவே உள்ள சான்றிதழை பதிவேற்றும் செய்யலாம். பின்னர் கால அவகாசம் வழங்கப்படும் தேதிக்குள் புதிய சான்றிதழை சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக 7.5% இடஒதுக்கீட்டு பிரிவினர் அரசுப் பள்ளியில் படித்தற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதாவது 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று தேவை. அதேநேரம் இதில் தற்போது சிக்கல் இருந்த நிலையில், 2022-23, 2023-24, 2024-25 ஆகிய ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எமிஸ் எண்ணை பதிவிட்டால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.