Advertisment

MBBS Counselling 2022: தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்; கட் ஆஃப் எப்படி இருக்கும்?

Tamilnadu MBBS Counselling 2022: தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு; அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MBBS Counselling 2022: தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்; கட் ஆஃப் எப்படி இருக்கும்?

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும்? கூடுமா அல்லது குறையுமா? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET-UG) தேசிய தேர்வு முகமை (NTA) இன்று ஜூலை 17-ஆம் தேதி நடத்தியது. அதற்கான முடிவுகள் அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், பொதுப் பிரிவு கலந்தாய்வு தற்போது தொடங்கியுள்ளது. 19 ஆம் தேதி தொடங்கியுள்ள முதற்கட்ட கவுன்சலிங் 25 ஆம் தேதி வரை நடைபெறும். அதாவது அதுவரை சாய்ஸ் ஃபில்லிங் செய்யலாம். 27 மற்றும் 28 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். 30 ஆம் தேதி முதற்கட்ட கவுன்சலிங் முடிவுகள் வெளியிடப்படும்.

இந்தநிலையில், கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என விளக்கியுள்ளார். அவர் தனது வீடியோவில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான கட் ஆஃப் தகவல்களை அளித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ் இடங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவ கல்லூரிகளில் 5200 இடங்கள் உள்ளன. 19 தனியார் கல்லூரிகளில் 2900 இடங்களும் மற்றும் 12 தனியார் பல்கலைக்கழகங்களில் 2600 இடங்களும் உள்ளன. மொத்தம் 69 மருத்துவ கல்லூரிகளில் 10750 இடங்கள் உள்ளன.

கட் ஆஃப் எப்படி இருக்கும்?

நீட் தேர்வு கட் ஆஃப் மதிப்பெண்களை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு, இந்த ஆண்டு எவ்வளவு இருக்கும் என நாம் பார்க்கலாம்.

கடந்த ஆண்டு 2021ல் தமிழ்நாடு கவுன்சிலிங்கில் இடங்கள் கிடைத்த கட் ஆஃப் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.

அரசு மருத்துவ கல்லூரிகள்:

OC - 586

BC - 539

BCM -519

MBC - 509

SC - 430

SCA - 363

ST – 317

தனியார் மருத்துவ கல்லூரிகள்:

OC - 523

BC - 495

BCM - 484

MBC - 472

SC - 383

SCA - 300

ST – 280

இந்த ஆண்டு 2022ல் தமிழ்நாடு கவுன்சிலிங்கில் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.

அரசு மருத்துவ கல்லூரிகள்:

OC - 581

BC - 527

BCM -503

MBC - 497

SC - 408

SCA - 355

ST – 308

தனியார் மருத்துவ கல்லூரிகள்:

OC - 510

BC - 477

BCM -471

MBC - 456

SC - 357

SCA - 276

ST – 265

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment