இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 2023 ஆம் ஆண்டில் நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும்? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET-UG) தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு மே மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: எம்.ஜி.ஆர் பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஆளுனர் ‘அப்பாயின்மென்ட்’-க்கு காத்திருக்கும் தேடுதல் குழு
இந்தநிலையில், 2023 ஆம் ஆண்டில் நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும்? என்பதை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. ஒரு ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியும் உள்ளது. இதில் மொத்தம் 4016 இடங்கள் உள்ளன.
மேலும் 19 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளது. இதில் மொத்தம் 1678 இடங்கள் உள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2023 ஆம் ஆண்டுக்கான கட் ஆஃப்
OC – 581
BC – 529
BCM -504
MBC – 496
SC – 407
SCA – 355
ST – 311
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2023 ஆம் ஆண்டுக்கான கட் ஆஃப்
OC – 468
BC – 454
BCM -461
MBC – 440
SC – 343
SCA – 261
ST – 151
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சென்ற ஆண்டை ஒட்டியே, அதே அளவில் அல்லது அதைவிட சற்று அதிகமாக இருக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil