Advertisment

யு.ஜி.சி அனுமதி பெறாத 3 தமிழக மருத்துவ கல்லூரிகள்; சிக்கலில் 1200 எம்.பி.பி.எஸ் மாணவர்கள்

தமிழகத்தில் உள்ள 3 தனியார் பல்கலைக்கழகங்கள் இன்னும் யு.ஜி.சி அனுமதியை பெறவில்லை; கேள்விக்குறியாகியுள்ள 1200 எம்.பி.பி.எஸ் மாணவர்களின் கல்வித்தகுதி

author-image
WebDesk
New Update
MBBS

தமிழகத்தில் உள்ள மூன்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) அனுமதி இல்லாததால், தற்போது படித்து வரும் 750 எம்.பி.பி.எஸ் மாணவர்கள் மற்றும் இந்த ஆண்டு சேர உள்ள மேலும் 450 எம்.பி.பி.எஸ் மாணவர்களின் கல்வித் தகுதி சிக்கலில் உள்ளது.

Advertisment

இந்த பல்கலைக்கழகங்கள் யு.ஜி.சி.,யின் கீழ் பட்டியலிடப்படவில்லை, எனவே, அந்தப் பல்கலைக்கழகங்களால் பட்டங்களை வழங்க முடியாது என்று யு.ஜி.சி அதிகாரிகள் தெரிவித்தாக TOI செய்தி வெளியிட்டுள்ளது.

யு.ஜி.சி விதிமுறைகளின்படி, ஒரு தனிச் சட்டம் அல்லது தற்போதுள்ள தமிழ்நாடு அரசு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2019ல் முறையான திருத்தம் மூலம், அரசு நடத்தும் பல்கலைக்கழகம் அல்லது தனியார் பல்கலைக்கழகத்தை ஒரு மாநில அரசு நிறுவ வேண்டும்.

ஆனால், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று தனியார் பல்கலைக்கழகங்கள் வெறும் அறிவிப்பின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. 

ஒரு பிரத்யேகச் சட்டத்தின் மூலம் இந்தப் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்குப் பதிலாக அறிவிப்பின் மூலம் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், தேசிய மருத்துவக் கவுன்சில் அந்த பல்கலைக்கழகங்களை சீட் மேட்ரிக்ஸில் சேர்த்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதித்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு கவுன்சலிங் கமிட்டியும் மூன்று மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் இடங்களை ஒதுக்குகிறது. ஆனால் யு.ஜி.சி இன்னும் அந்தப் பல்கலைக்கழகங்களை அங்கீகரிக்கவில்லை.

"இந்த கல்லூரிகள் அனைத்தும் தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதால் சீட் மேட்ரிக்ஸில் சேர்க்கப்பட்டன. அதை மேட்ரிக்ஸில் சேர்க்குமாறு அரசு எங்களிடம் கூறியது. பல்கலைக்கழகத்திற்கு யு.ஜி.சி ஒப்புதல் அளித்துள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாது" என்று மருத்துவ கவுன்சலிங் கமிட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு கூறுகையில், இந்த விவகாரம் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார். ஆனால், உயர்கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் கருத்துக்கள் அல்லது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.

இந்தநிலையில், யு.ஜி.சி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார், ”தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான சில அம்சங்கள் யு.ஜி.சி சட்டம் மற்றும் விதிமுறைகளுடன் முழுமையாக ஒத்துப்போகவில்லை. யு.ஜி.சி சம்பந்தப்பட்ட மாநில அரசுத் துறைகளுடன் இந்த விஷயத்தைப் பின்தொடர்ந்து, தனிச் சட்டம் மூலமாகவோ அல்லது தற்போதுள்ள தொடர்புடைய மாநில அரசு சட்டத்தில் திருத்தங்கள் மூலமாகவோ பல்கலைக்கழகங்களை நிறுவக் கோரியது," என்று கூறியுள்ளார்

”தமிழகத்தில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களுக்கு இந்தப் பிரச்சினை நீடிக்கிறது. இந்தப் பல்கலைக்கழகங்களை யு.ஜி.சி பட்டியலில் சேர்ப்பது நிலுவையில் உள்ளது, ஏனெனில் மாநில சட்டசபையில் சட்டத்தின் நிறைவேற்றம் / திருத்தங்கள் காத்திருக்கின்றன. பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ளது, முடிந்தவரை விரைவில் ஒரு தீர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் ஜேப்பியார் பல்கலைக்கழகம் ஆகிய ஏழு முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகங்களில் இரண்டிற்கு யு.ஜி.சி.,யின் முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் பதில் திருப்திகரமாக இருந்தால் தொடரும், இல்லை என்றால் முதற்கட்ட அனுமதி வாபஸ் பெறப்படும்,” என்று ஜெகதேஷ்குமார் கூறினார்.

முன்னதாக யு.ஜி.சி அறிவுறுத்தலுக்குப் பிறகு, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மாணவர் சமூகத்தின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2019ஐ அக்டோபர் 10, 2023 அன்று திருத்துவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தினார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, அதன் அட்டவணையில் பல்கலைக் கழகங்களின் பெயர்களை சேர்க்க முன்மொழிந்தது. ஆனால், இன்னும் கவர்னரின் ஒப்புதலை பெறவில்லை.

இந்த ‘தனியார் பல்கலைக்கழகங்களில்’ மருத்துவம், பொறியியல் அல்லது வேறு ஏதேனும் படிப்புகளுக்கான சேர்க்கை செல்லாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர், ஏனெனில் இந்த நிறுவனங்கள் இன்னும் "தனியார் பல்கலைக்கழகம்" என்ற அந்தஸ்தை பெறவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment