பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு; டாப் பாராமெடிக்கல் படிப்புகள் இவைதான்!

மருத்துவம் சார்ந்து டிகிரி, டிப்ளமோ படிப்புகள் படிக்க விருப்பமா? டாப் பாராமெடிக்கல் கோர்ஸ்களின் பட்டியல் இங்கே

மருத்துவம் சார்ந்து டிகிரி, டிப்ளமோ படிப்புகள் படிக்க விருப்பமா? டாப் பாராமெடிக்கல் கோர்ஸ்களின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MBBS

மருத்துவம் சார்ந்து படிக்க விரும்புபவர்களுக்கு நீட் தேர்வு தகுதி இல்லாமல் கிடைக்கக் கூடிய பாராமெடிக்கல் படிப்புகளில் டாப் படிப்புகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். உறுதியான வேலை வாய்ப்பு காரணமாக இந்தப் படிப்புகளில் சேர பெரும்பாலானோர் விரும்புவர். இருப்பினும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற டாக்டர் நிலை படிப்புகளில் சேர நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம்.

ஆனால், நீட் தேர்வு இல்லாமல் சேர்க்கை பெறக் கூடிய மருத்துவம் சார்ந்த இளநிலை பட்டப்படிப்புகள் ஏராளமாக உள்ளன. துணை மருத்துவப் படிப்புகள் எனப்படும் பாராமெடிக்கல் கோர்ஸ்களும் மாணவர்கள் அதிகம் விரும்பப்படுகிறது. இவற்றில் சில படிப்புகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது. 

இந்தநிலையில் பாராமெடிக்கல் படிப்புகளில் டாப் படிப்புகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். ஓபன் யுவர் மைண்ட் வித் முருகா எம்பி என்ற யூடியூப் சேனலில், இந்த பாராமெடிக்கல் படிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. வீடியோவின்படி, 

Advertisment
Advertisements

1). பி.எஸ்.சி நர்சிங் (B.Sc Nursing)

2). பி.எஸ்.சி மெடிக்கல் லேப் டெக்னாலஜி (B.Sc Medical Laboratory Technology)

3). பி.எஸ்.சி ரேடியாலஜி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி (B.Sc Radiology/ Imaging Technology)

4). பி.எஸ்.சி ஆப்ரேசன் தியேட்டர் டெக்னாலஜி (B.Sc Operation Theatre Technology)

5). பி.எஸ்.சி டயாலிசிஸ் டெக்னாலஜி (B.Sc Dialysis Technology)

6). பி.பி.டி பிசியோதெரபி (Bachelor of Physiotherapy)

7). பி.எஸ்.சி அனஸ்தீசியா டெக்னாலஜி (B.Sc Anesthesia Technology)

8). பி.எஸ்.சி ஆப்டோமெட்ரி (B.Sc Optometry)

9). பி.எஸ்.சி நியூட்ரீசியன் அண்ட் டயட்டிக்ஸ் (B.Sc Nutrition and Dietetics)

10). பி.எஸ்.சி பெர்ஃபியூசன் டெக்னாலஜி (B.Sc Perfusion Technology)

11). பி.எஸ்.சி ஆடியோலஜி அண்ட் ஸ்பீச் லாங்குவேஜ் பேத்தாலஜி (B.Sc Audiology and Speech Language Pathology)

இவை தவிர டிப்ளமோ துணை மருத்துவ படிப்புகளும் உள்ளன. இவையும் மாணவர்களால் அதிகம் விரும்பிப் படிக்கப்படுகிறது. டிப்ளமோ படிப்புகளில் டாப் கோர்ஸ்களின் பட்டியல் இங்கே

1). டிப்ளமோ மெடிக்கல் லேப் டெக்னாலஜி (Diploma in MLT)

2). டிப்ளமோ ரேடியாலஜி (Diploma in Radiology)

3). டிப்ளமோ நர்சிங் கேர் (Diploma in Nursing Care)

Medical Admission

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: