Advertisment

வாவ்... இது அசத்தல்..! 7.5% கோட்டா இல்லாமல் எம்.பி.பி.எஸ் சேர்ந்த 19 தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்

7.5% இடஒதுக்கீடு இல்லாமல் மருத்துவ இடங்களைப் பெற்ற 78 அரசுப் பள்ளி மாணவர்கள்; 19 பேர் எம்.பி.பி.எஸ் இடங்களையும் 59 பி.டி.எஸ் இடங்களையும் பெற்று அசத்தல்

author-image
WebDesk
New Update
mbbs students aiq

குறைந்தபட்சம் 19 அரசுப் பள்ளி மாணவர்கள், 7.5% ஒதுக்கீடு இல்லாமல் எம்.பி.பி.எஸ் இடங்களைப் பெற்றுள்ளனர் என்று தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Advertisment

2024 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒதுக்கீட்டின் கீழ் 8,316 மருத்துவ இடங்கள் உள்ளன, அவற்றில் 683 எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 78 மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உட்பட பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர் என்று மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என TOI செய்தி வெளியிட்டுள்ளது.

”78 மாணவர்களில் 4 பேர் மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ் இடங்களைப் பெற்றுள்ளனர், ஒன்பது மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் சேர்க்கை பெற்றனர், ஆறு பேர் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடங்களைப் பெற்றனர். மீதமுள்ள 59 பேர் பி.டி.எஸ் இடங்களுக்குச் சேர்ந்தனர். ஒருவர் அரசு பல் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்” என்று அந்த அதிகாரி கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் செயல்திறன் மேம்பட்டுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீட் தேர்வு அமலுக்கு வந்ததும், மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாகக் குறைந்தது. அனைத்துப் பிரிவுகளின் கீழும் மருத்துவ சேர்க்கைக்கான கட்-ஆப் அதிகரித்து, ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை சவாலாக உள்ளது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் இடகளைப் பெறும் நீட் ரிப்பீட்டர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். 2024 ஆம் ஆண்டில், 7.5% ஒதுக்கீட்டில் உள்ள முதல் 10 மாணவர்களும் நீட் ரிப்பீட்டர்கள், மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் நீட் ரிப்பீட்டர்களின் சராசரி எண்ணிக்கை கிட்டத்தட்ட 80% ஆகும்.

மாநில அரசு பாடத்திட்டத்தின் மாணவர்கள் சி.பி.எஸ்.இ மாணவர்களுடன் ஏறக்குறைய சமமானதாக இருப்பதாக தரவு காட்டுகிறது. உதாரணமாக, மருத்துவ இடங்களைப் பெற்ற 4,140 மாணவர்கள் சி.பி.எஸ்.இ வாரியத்தையும், 4,030 மாணவர்கள் மாநில வாரியத்தையும் 39 பேர் மற்ற வாரியங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இருப்பினும், இந்தத் தகவல் அனைத்தும் சரிபார்க்கப்படவில்லை என்று இயக்குநரகம் தெரிவித்துள்ளது. "தனியார் கோச்சிங் சென்டர்களில் மாணவர்கள் நீட் பயிற்சியில் கலந்து கொண்டார்களா என்பது குறித்த தகவல்களை நாங்கள் கேட்டுள்ளோம். கொள்கை விஷயங்களுக்காக இந்தத் தகவல் எங்களுக்குத் தேவைப்பட்டது. பல மாணவர்கள் தாங்கள் கலந்து கொள்ளவில்லை என்று எங்களிடம் கூறியதால், இதை எங்களால் சரிபார்க்க முடியவில்லை," என்று அந்த அதிகாரி கூறினார்.

2023 ஆம் ஆண்டில், சேர்க்கை பெற்ற 3,248 பேர் நீட் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும், 3,248 மாணவர்கள் நீட் பயிற்சியில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தனர். எங்களால் மாணவர்களின் பள்ளி, வாரியம் அல்லது அவர்கள் நீட் ரிப்பீட்டர்களா என்பதை சரிபார்க்க முடியும், அவர்கள் தனியார் பயிற்சி எடுத்தார்களா என்பதை சரிபார்க்க எந்தப் பதிவேடும் இல்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mbbs Counselling Mbbs NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment