Advertisment

TMB Jobs; தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamilnadu Mercantile Bank invites application for Specialist officers apply soon: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை; விவசாயம், சட்டம் மற்றும் சந்தையியல் படித்தவர்களுக்கு வாய்ப்பு; சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
TMB Jobs; தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்படுவதாக அந்த வங்கி அறிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் விவசாயம், சட்டம் மற்றும் மார்க்கெட்டிங் ஆகிய பிரிவுகளில் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 03.10.2021

வேளாண் அதிகாரி (Agricultural Officer)

கல்வித் தகுதி : இளங்கலை விவசாயப் படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 31.08.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி அனுபவம் : 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சட்ட அதிகாரி (Law Officer)

கல்வித் தகுதி : இளங்கலை அல்லது முதுகலை சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 31.08.2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி அனுபவம் : 2 வருட பணி அனுபவம் அவசியம்.

மார்க்கெட்டிங் அதிகாரி (Marketing Officer)

கல்வித் தகுதி : இளங்கலை கலை அல்லது வணிகவியல் படிப்பில் முதல் வகுப்பில் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுகலை நிதியியல் அல்லது சந்தையில் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 31.08.2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி அனுபவம் : 2 வருட பணி அனுபவம் அவசியம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்கள் அனைத்தும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும். நேர்முகத் தேர்வு வீடியோ கான்பரசிங் மூலம் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 03.10.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_SPO20212201.pdf என்ற இணையதள பக்கத்தினைப் பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs Bank News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment