Advertisment

ரூ. 1 லட்சம் பரிசுக்கான பேச்சுப்போட்டி; கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்!

பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மாநில அளவில் முதல் பரிசுக்கு ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசுக்கு ரூ. 50,000, மூன்றாம் பரிசுக்கு ரூ. 25,000 வழங்கப்படும் – சிறுபான்மையினர் ஆணையம் அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிரதிநிதித்துவ படம்

பிரதிநிதித்துவ படம்

ரூ. 5000 முதல் ரூ. 1 லட்சம் பரிசு வரையிலான மாநில அளவிலான பேச்சுப்போட்டிக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Advertisment

தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் நடத்த உள்ளதாக தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: வேலை வாய்ப்பு சார்ந்த தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள சிறப்பு படிப்புகள்; ஐ.ஐ.டி மெட்ராஸ் அறிமுகம்

கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்களைக் கடந்து மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும் அறிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் விதைத்திடவும், தமிழ்நாடு முதலமைச்சரின் 'திராவிட மாடல்' என்ற லட்சியத்தை மாணவர்களிடம் சேர்த்து, நமது மொழி, பண்பாடு, இலக்கியம், கலைகள், வரலாறுகள் பற்றிய புரிதல்களையும், இன உணர்வையும் அவர்கள் பெற்றிடவும் இந்த போட்டிகள் உதவும் என்று சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது. .

பேச்சுப் போட்டி விதிகள்

போட்டிகள் மாவட்ட அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக நடத்தப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் கலந்துகொள்ளும் மாநில அளவிலான போட்டி இறுதியில் நடைபெறும்.

தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தமிழகப் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கு பெற தகுதி உடையவர்கள்.

ஒவ்வொரு நிறுவனமும் தங்களது நிறுவனத்தின் சார்பாக தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தலா இரண்டு மாணவர்களை அனுப்பலாம். பங்கேற்க விரும்பும் கல்வி நிறுவனங்கள், வரும் 20 ஆம் தேதிக்குள் மாணவர்களின் பெயர், மின்னஞ்சல், அஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

டி.ரவிச்சந்திரன் இ.ஆ.ப., உறுப்பினர் செயலர்,

மாநில சிறுபான்மையினர் ஆணையம், முதல் தளம், கலச மஹால், புராண கட்டிடம், சேப்பாக்கம், சென்னை 600005

மின்னஞ்சல் முகவரி: smcelocution@gmail.com

பரிசு விவரம்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தனித்தனியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசுக்கு ரூ. 20,000, இரண்டாம் பரிசுக்கு ரூ. 10,000, மூன்றாம் பரிசுக்கு ரூ. 5000 வழங்கப்படும். மாநில அளவில் முதல் பரிசுக்கு ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசுக்கு ரூ. 50,000, மூன்றாம் பரிசுக்கு ரூ. 25,000 வழங்கப்படும்.

போட்டிக்கான தலைப்புகள்:

தமிழ்:

1. "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே"

2. பெரியாரும் அம்பேத்கரும் கண்ட சமூக ஜனநாயகம்

3. கல்விக் கண்திறந்த கர்மவீரர் காமராசர்

4. அறிஞர் அண்ணாவின் "தமிழ்க் கனவு"

5. கலைஞர் கண்ட மாநில சுயாட்சியும், மாநில உரிமைகளும்

6. மீண்டும் அண்ணல் காந்தி அவதரிக்க வேண்டும்!

7. வரலாறு தமிழ்நாட்டில் இருந்து துவங்குகிறது!

8. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இந்தியா!

9. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!

10. தமிழ்நாட்டின் தியாகதீபங்களால் சுடர்விட்ட இந்திய விடுதலைப்போர்!

11. இந்தியா நமது தேசம்! மனித நேயம் அதன் சுவாசம்!!

12. நேரு கண்ட மதச்சார்பற்ற இந்தியா

13. என் சமகால இளைஞர்களே..?"

14. சமூகநீதி காப்போம், சரித்திரம் படைப்போம்

15. திராவிடம் சொல்லும் பண்பாட்டு நெறி

ஆங்கிலம்: 

1. India of My Dreams

2. Save my Mother Earth!

3. Do we need reservation in Judiciary?

4. The Perils of jobless growth

5. Serving Humanity is my Religion

6. Independent Judiciary - The watch Dog of Democracy

7. Freedom of Expression and the civilized society

8. Women Empowerment

9. Social Media - A blessing or a curse?

10. Unity Not Uniformity

11. Freedom of Religion - A basic human Right

12. Social justice Vs inequality

13. Dravidian Ethos

14. The roll of State in Economic Development

15. Regional aspirations a must for National progress

தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள் அனைவரும் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி நடைபெறும் இப்போட்டிகளில் தங்களது நிறுவனங்களின் மாணவ - மாணவியர்கள் சிறப்பாக பங்கேற்க ஏற்பாடு செய்யுமாறு சிறுபான்மையினர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment