/tamil-ie/media/media_files/uploads/2021/09/mrb-fso.jpg)
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில், 119 உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறை 30.09.2021 முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி 21.10.2021.
உணவு பாதுகாப்பு அதிகாரி(FOOD SAFETY OFFICERS)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 119
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.35,900
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 700, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 350
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.10.2021
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.