தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) தொழில்சார் சிகிச்சையாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 02.07.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் வேலை; 332 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!
தொழில்சார் சிகிச்சையாளர் (Occupational Therapist)
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் Bachelor Degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 25 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும் மற்றும் டிகிரி மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300
விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.07.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/pdf/2023/Detailed_Notification_Occupational_Therapist.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.