/tamil-ie/media/media_files/uploads/2023/07/mrb.jpg)
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) ஃபிட்டர் மற்றும் வெல்டர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவம் சார்ந்த பணியிடங்களை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள ஃபிட்டர் மற்றும் வெல்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 01.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வெல்டர் (Skilled Assistant Grade – II (Welder))
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வெல்டர் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,500 – 71,900
ஃபிட்டர் (Skilled Assistant Grade-II (Fitter))
காலியிடங்களின் எண்ணிக்கை: 20
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஃபிட்டர் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,500 – 71,900
வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.07.2025 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி / எஸ்.டி/ எஸ்.சி.ஏ/ எம்.பி.சி/ பி.சி.எம்/ பி.சி பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஐ.டி.ஐ படிப்பு 60%, 10 ஆம் வகுப்பு 40% சதவீதம் என்ற அளவில் மதிப்பெண்கள் கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://mrbonline.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, எஸ்.சி / எஸ்.டி/ எஸ்.சி.ஏ/ மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 300
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.07.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.