தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) ஆய்வக நுட்புனர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 30.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆய்வக நுட்புனர் (Laboratory Technician)
காலியிடங்களின் எண்ணிக்கை: 60
கல்வித் தகுதி: Diploma in Medical Laboratory Technician Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35400 – 130400
வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு 01.07.2025 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும் மற்றும் டிப்ளமோ மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/ SCA/ ST/ DAP பிரிவினருக்கு ரூ. 300
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.07.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.