Advertisment

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் வேலை; 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamilnadu MRB recruitment Electrician Welder jobs Apply soon: தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர் பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
Nov 03, 2021 16:29 IST
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் வேலை; 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் வெல்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலியாக உள்ள வெல்டர், எலக்ட்ரீசியன் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 15.11.2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

எலக்ட்ரீசியன்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எலக்ட்ரீசியன் அல்லது வயர்மேன் பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.19,500 – 62,000

வெல்டர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வெல்டர் பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.19,500 – 62,000

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 40%க்கும், ஐடிஐ மதிப்பெண்கள் 60%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://mrbonline.in/  என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 500, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 250

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட இணையதளப் பக்கங்களைப் பார்வையிடவும்.

எலக்ட்ரீசியன்: http://www.mrb.tn.gov.in/pdf/2021/Electrician_Grade%20_II_Notification_29_10_2021.pdf

வெல்டர்: http://www.mrb.tn.gov.in/pdf/2021/Welder_Grade%20_II_Notification_29_10_2021.pdf

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Jobs #Tamil Nadu Jobs #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment