மருத்துவத்துறை வேலைவாய்ப்பு; 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் களப்பணியாளர் பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Tamilnadu MRB recruitment Field assistant jobs Apply soon: தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) களப்பணியாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள களப்பணியாளர் பணியிடங்கள் நேரடி முறையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 02.02.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

களப்பணியாளர் (Field Assistant)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 174

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Medical Laboratory Technology Course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.18,200 – 57,900

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, CMLT சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும், CMLT சான்றிதழ் படிப்புமதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://mrbonline.in/  என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.02.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://stgaccbarathi.blob.core.windows.net/mrb2021/DOC/Field_Assistant_Notification_13.01.2022.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu mrb recruitment field assistant jobs apply soon

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com