scorecardresearch

தமிழ்நாடு மருத்துவத்துறையில் 238 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் இளநிலை ஆய்வாளர் மற்றும் இருட்டறை உதவியாளர் பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு மருத்துவத்துறையில் 238 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamilnadu MRB recruitment Junior Analyst, Dark room assistant jobs Apply soon: தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) இளநிலை ஆய்வாளர் மற்றும் இருட்டறை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவம் சார்ந்த பணியிடங்களை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் மற்றும் இருட்டறை உதவியாளர் ஆகிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 05.04.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இளநிலை ஆய்வாளர் (Junior Analyst)

காலியிடங்களின் எண்ணிக்கை : 29

கல்வித் தகுதி : Master’s Degree in Chemistry or Biochemistry or Microbiology or Dairy Chemistry or Food Technology, Food and Nutrition or Bachelor’s Degree in Technology in Dairy /Oil or Veterinary Sciences

சம்பளம் : ரூ.36,400 – 1,15,700

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 200 வினாக்களுடன் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 2.30 மணி நேரம்.

இருட்டறை உதவியாளர் (Dark Room Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 209

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Dark Room Assistant சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.19,500 – 62,000

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, Dark Room Assistant சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும், Dark Room Assistant சான்றிதழ் படிப்புமதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://mrbonline.in/  என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பக் கட்டணம் :

இளநிலை ஆய்வாளர்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 500

இருட்டறை உதவியாளர்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.04.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/pdf/2022/JA_notification_160322.pdf மற்றும் https://www.mrb.tn.gov.in/pdf/2022/DRA_notification_160322.pdf என்ற இணையதளப் பக்கங்களைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu mrb recruitment junior analyst dark room assistant jobs apply soon

Best of Express