Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் சீட் அதிகரிப்பு இல்லை: நீட் கட் ஆஃப் உயரும்?

தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை; எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்கப்படாததால், நீட் கட் ஆஃப் மதிப்பெண்கள் உயரும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

Tamilnadu NEET cut off may increase due to no hike in MBBS seats: தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் புதிய எம்.பி.பி.எஸ் இடங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. மேலும், தற்போதுள்ள கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்கவோ, புதிய கல்லூரிகளை திறக்கவோ இல்லை. எனவே, இந்த ஆண்டு நீட் கட் ஆஃப் உயரும் என்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான போட்டி கடுமையாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisment

இந்தியாவில் 612 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன, அவற்றில் 70 மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 10,725 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் 38 அரசுக் கல்லூரிகள் உள்ளன. இவை நாட்டிலேயே மிக அதிகமாக 5,225 மருத்துவ இடங்களை வழங்குகின்றன. அதிலும், 2021 ஆம் ஆண்டில், தமிழ்நாடு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கியது. மேலும், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள் உயர்த்தப்பட்டன. இதனையடுத்து அங்கு மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது. இந்த அரசு கல்லூரிகளில் உள்ள இடங்களை பிடிக்க மாணவர்களிடையே கடுமையான போட்டி இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: பொறியியல் கவுன்சலிங்; எந்த கோர்ஸ் படிக்கலாம்? வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் எவை?

இதனிடையே, தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளையும் நிர்வகிக்கும் மருத்துவக் கல்வி இயக்குநரகம், புதிய மருத்துவக் கல்லூரிகள் அல்லது மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான உத்தரவுகள் வரவில்லை என்று கூறுகிறது. எனவே, “தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மாற்றமின்றி அப்படியே இருக்கும்” என மருத்துவக் கல்வி இயக்குநர் கூறியுள்ளார்.

அதேநேரம், ஜூலை 18 அன்று, தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவ மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு வாரியம், 2023-24 கல்வியாண்டிற்கான புதிய கல்லூரிகளைத் தொடங்க அல்லது இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநிலங்களிலிருந்து விண்ணப்பங்களை கோரியது.

இது தொடர்பாக, மருத்துவ வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஜூலை 21 முதல் அக்டோபர் 10 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி, ஆகஸ்ட் 10ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக மருத்துவ துறையிலிருந்து இதுவரை விண்ணப்பங்கள் எதுவும் அனுப்பப்படவில்லை.

அதேநேரம், 6 புதிய மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 250 இடங்களாக அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. மருத்துவக் கல்லூரிகள் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உயர் சிகிச்சை மருத்துவமனைகள் இருக்கும் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு முதுகலை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதுகலை இடங்களை சேர்க்க மருத்துவ துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நன்கு நிறுவப்பட்ட மருத்துவ கல்லூரிகளில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அரசு உயர்த்த உள்ளது.

அதன்படி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரேடியோ நோயறிதலில் மூன்று முதுகலை இடங்களும், அவசர சிகிச்சை மருத்துவத்தில் 64 முதுகலை இடங்களும், ஆறு கல்லூரிகளில் 11 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் தஞ்சாவூரில் இரண்டு அறுவைசிகிச்சை புற்றுநோயியல் இடங்களும், சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் நரம்பியல் இரண்டும், குழந்தைகள் காஸ்ட்ரோஎன்டாலஜியில் ஒன்றும், திருச்சியில் நரம்பியல் அறுவை சிகிச்சையில் இரண்டும், காஸ்ட்ரோஎன்டாலஜியில் இரண்டு இடங்களும், வேலூரில் காஸ்ட்ரோஎன்டாலஜியில் இரண்டு இடங்களும் அடங்கும்.

இது அரசுத் துறையில் சேவைகளை மேம்படுத்தும் அதே வேளையில், மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இடையே போட்டியை கடுமையானதாக மாற்றும் இருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் 90%க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களின் சதவீதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதேநேரம் மருத்துவ இடங்கள் அதிகரிக்கவில்லை என்றால், போட்டி கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Medical Admission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment