தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்!
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை (அல்லது) முதுநிலை பட்டம் பெற்றவர்களும், மற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை (அல்லது) முதுநிலை பட்டம் பெற்றவர்களும், மற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்
tamilnadu open university job fair , தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்,TNOU job fair , job fair in chennai , chennai job fair , finfing jobs in chennai , chennai job fair news
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம், இந்த வாரம் சனிக்கிழமை ( செப்டம்பர் 30) நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது.
Advertisment
இந்த வேலை வாய்ப்பு முகாமில், 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை (அல்லது) முதுநிலை பட்டம் பெற்றவர்களும், மற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ள பயனர்கள், விண்ணப்பம் ( http://www.tnou.ac.in/ ) இணைய முகவரிக்கு சென்று டவுன்லோட் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட இந்த விண்ணப்பம், கல்வி சான்றிதழ்கள், மார்பளவு போட்டோ, அடையாள அட்டை/ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு எடுத்து செல்ல வேண்டும்.
நீங்கள் செய்ய வேண்டியது, முதலில் http://www.tnou.ac.in/ இணைய முகவரிக்கு சென்று, விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, கேட்கப்பட்ட தகவல்களை கவனமாக நிரப்புங்கள். சனிக்கிழமை 9.30 மணிக்குள் நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரியில் சென்றுவிடுங்கள்.