Advertisment

தமிழக காவல்துறை வேலை; 12-ம் வகுப்பு முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு; 29 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக போலீஸ் தேர்வு: கட் ஆஃப் எப்படி இருக்கும்?

Tamilnadu Police Department recruitment 2022 for 29 Junior Reporter posts: தமிழ்நாடு காவல்துறை சுருக்கெழுத்து பணியகத்தில் ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 29 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பின்னர் கொரோனா காரணமாக ஆட்சேர்ப்பு நடைமுறைகள் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தொடங்கியுள்ளது. ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கத் தேவையில்லை.

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 165 பணியிடங்கள்; 8 முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஜூனியர் ரிப்போர்ட்டர் (Junior Reporter)

காலியிடங்களின் எண்ணிக்கை: 29

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருகெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 36,200 – 1,14,800

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு சுருக்கெழுத்து திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/advt201819.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2 nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai- 600 004.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2022

இந்த அறிவிப்பு குறித்து மேலும் விவரங்கள் அறிய https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/advt201819.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment