scorecardresearch

தபால் துறை வேலை வாய்ப்பு; ஐ.டி.ஐ தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய தபால் துறையின் மதுரை மண்டலத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தபால் துறை வேலை வாய்ப்பு; ஐ.டி.ஐ தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய தபால் துறையில் அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ முடித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்திய தபால் துறையின் மதுரை மண்டலத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 07 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2022

இதையும் படியுங்கள்: டாடா நிறுவனத்தில் பெண்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Skilled Artisans

காலியிடங்களின் எண்ணிக்கை – 7

பிரிவு வாரியாக காலியிடங்களின் விவரம்

M.V.Mechanic – 1

M.V.Electrician – 2

Painter – 1

Welder – 1

Carpenter – 2

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2022 அன்று 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 19,900 – 63,200

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு டிரேடு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_19092022_MMS_TN_Eng.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Manager, Mail Motor Service, CTO Compound, Tallakulam, Madurai 625002.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100, ஆனால் SC/ST மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.10.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_19092022_MMS_TN_Eng.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu post office recruitment 2022 for skilled artisans in madurai

Best of Express