scorecardresearch

தபால் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய தபால் துறையின் தமிழ்நாடு பிரிவில் ஓட்டுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 58 காலியிடங்கள்; 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamil Nadu Post Office invites applications for the post of Driver
தமிழ்நாடு போஸ்ட் ஆபிஸில் டிரைவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய தபால் துறையில் அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்திய தபால் துறையின் தமிழ்நாடு பிரிவில் உள்ள பல்வேறு மண்டலங்களில் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 58 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023

இதையும் படியுங்கள்: சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 84 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

ஓட்டுனர் (Staff Car Driver)

காலியிடங்களின் எண்ணிக்கை – 58

பிரிவு வாரியாக காலியிடங்களின் விவரம்

சென்னை மண்டலம் – 6

மத்திய மண்டலம் – 9

தபால் வாகன சேவை – 25

தெற்கு மண்டலம் – 3

வடக்கு மண்டலம் – 15

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 19,900 – 63,200

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_28022023_MMS_TN_Eng.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, Chennai – 600006

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_28022023_MMS_TN_Eng.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu post office recruitment 2023 for 58 driver jobs apply soon