scorecardresearch

தமிழக அஞ்சல்துறை வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழக அஞ்சலக காப்பீட்டுத்துறை வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அஞ்சல்துறை வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Tamilnadu postal insurance invites application for agents apply soon: தமிழக அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை, அண்ணாசாலையில் உள்ள முதன்மை தபால் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்: ரூ. 1 லட்சம் பரிசு; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி; ஆளுனர் அறிவிப்பு

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயதுத் தகுதி: 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

படித்து வேலைவாய்ப்பு இல்லாத அல்லது சுயவேலை செய்கின்ற இளைஞர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், மகிளா மண்டல ஊழியர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், காப்பீட்டு பத்திரங்கள் விற்பனையில் அனுபவம் உள்ளவர்கள் ஆகியோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனையில் அனுபவம், கணினி அறிவு, உள்ளூர் பற்றிய அறிவு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்வோர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெறாதவர்கள் ஆவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: முதன்மை தபால் அலுவலகம், அண்ணா சாலை, சென்னை</p>

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:  28.07.2022 அன்று காலை 11.00 மணி

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

நேர்முகத்தேர்வுக்கு வருவோர் தங்களின் சுய விவரக்குறிப்பு, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயதுச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் (ஏதாவது இருப்பின்) ஆகியவற்றுடன் கலந்துக்கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்கள் ரூ. 5000-ஐ ரொக்க பாதுகாப்பாக (தேசிய சேமிப்புப் பத்திரம், கே.வி.பி வாயிலாக) செலுத்த வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu postal insurance invites application for agents apply soon