பொதுப்பணித்துறை வேலைவாய்ப்பு; 500 பணியிடங்கள்; டிப்ளமோ, பிஇ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை வேலை அறிவிப்பு; பி.இ மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Tamilnadu PWD dept invites application for graduate and diploma apprentice training: தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறையில் 500 டிப்ளமோ மற்றும் பிஇ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பயிற்சி பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் ஒரு வருடத்திற்கு நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.01.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இன்ஜினியரிங் அப்ரண்டிஸ்

காலியிடங்களின் எண்ணிக்கை : 340

சிவில் – 306

எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் – 34

கல்வித் தகுதி : சிவில் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.இ சிவில் படித்திருக்க வேண்டும். எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பணியிடங்களுக்கு பி.இ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 2019, 2020 மற்றும் 2021-ம் ஆண்டில் பி.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 9,000

டிப்ளமோ அப்ரண்டிஸ்

காலியிடங்களின் எண்ணிக்கை : 160

சிவில் – 144

எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் – 16

கல்வித் தகுதி : சிவில் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ சிவில் படித்திருக்க வேண்டும். எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பணியிடங்களுக்கு டிப்ளமோ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 2019, 2020 மற்றும் 2021-ம் ஆண்டில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 8,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு பி.இ அல்லது டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://boat-srp.com/ மற்றும் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.01.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Notification_PWD_2021-22.pdf  என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu pwd dept invites application for graduate and diploma apprentice training

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com