+2 Student Marksheet Update : தமிழகத்தில் கடந்த வாரம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இந்த தேர்வுக்குறிய மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பள்ளி இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மாணவர்களின் முந்தை வகுப்பு மற்றும் முந்தைய தேர்வுகளில் அவர்களின் செயல்திறன் பொருத்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் 10-ம் வகுப்பில் முதல் 3 பாடங்களில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதம், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 20 சதவீதம், மற்றும் 12-ம் வகுப்பில், முன்பு நடைபெற்ற செயல்திறன் தேர்வில் 30 சதவீதம் என மதிப்பிட்டு மாணவர்களுக்கு மதிப்பெணகள் வழங்கப்பட்டது.
இந்த மதிப்பீட்டின் படி வழங்கப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. 8.16 லட்சம் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த தேர்வில் கிட்டத்தட்ட அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவே அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி அரசு தேர்வு இயக்குநரகம் மூலம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் பட்டியல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டிருந்தாலும், சில பள்ளிகள் மாணவர்களை சிறிய குழுக்களாக வரவழைத்து, மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சாள்றிதழ்களை வழங்கி வருகின்றன. இதில் மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த தேர்வு முடிவுகளில் முடிவுகள் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேர்வுகள் பதிவு செய்து எழுதலாம் என்று பள்ளி கல்வித் துறை கூறியிருந்தது. ஆனாலும் பெரும்பான்மையான மாணவர்கள் இதில் அதிகம் ர்வம் காட்டவில்லை என்று பள்ளிகள் கூறுகின்றன. மேலும் பொதுத் தேர்வுகளை மேற்கொள்வது மாணவர்களின் விருப்பம். அவர்கள் அடுத்த தேர்வை தேர்வு செய்யும் பட்சத்தில் அந்த தேர்வு முடிவே இறுதியானதாக இருக்கும் என்று பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil