Advertisment

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காத தடையை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
TN Govt announce RS 2500 Hikes Salary For Part Time Teachers Tamil News

பள்ளி கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த தடையை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்போது, 50 சதவீத இடங்கள் நேரடியாகவும், 48 சதவீத இடங்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையிலும், மீதமுள்ள 2 சதவீத இடங்களை தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் நிரப்ப வேண்டும் என்று கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

இந்த அரசானைப்படி தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி அமைச்சுப் பணியாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சுப் பணியாளர்களுக்கு, 2 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்காமல், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று இடடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2014-2015 முதல் 2024-2025 வரை அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீட்டின் படி 130 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்த உத்தரவுக்காக காத்திருக்கிறோம். தலைமை வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராக உள்ளதால், இந்த வழக்கை மாற்று தேதிக்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆசிரியர் தகுதித்தேர்வில், தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு, 2014-ம் ஆண்டு முதல் உரிய பதவி உயர்வு வழங்கப்படாததால், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு மனுதாரர்களின் கோரிக்கைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறி, பட்டதாரி ஆசிரியர்கள் நியமத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காத தடையை நீடித்து உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அக்டோபர் 17-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment