Advertisment

போக்சோ சட்ட விழிப்புணர்வு வீடியோக்களை பள்ளிகளில் ஒளிப்பரப்ப வேண்டும்; கல்வித்துறை உத்தரவு

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு காணொலிகளை பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும்; முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை

author-image
WebDesk
New Update
exam dpi

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு காணொலிகளை பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு திரையிட்டுக் காட்ட வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நாட்டில் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான பேச்சு, செயல்பாடு, பார்வை உட்பட துன்புறுத்தல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுதர முடியும். இருப்பினும் இவை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், பல குற்றங்கள் புகார்களாக பதிவு செய்யப்படுவதில்லை.

போக்சோ சட்டம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் போக்சோ சட்டப்பிரிவுகள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், விழிப்புணர்வு வீடியோக்களை தயாரித்து, யூடியூபில் வெளியிட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ், குற்றங்களாக கருதப்படும் செயல்பாடுகள் குறித்தும், புகார் அளிக்க வேண்டிய முறைகள், அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்தும், அனிமேஷன் அடிப்படையில் வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு காணொலிகளை பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு திரையிட்டுக் காட்ட வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; “தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் போக்சோ சட்டத்தை எளிமையாக விளக்கும் வகையில் சில காணொலிகளை உருவாக்கியுள்ளது. அவை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் வலைத்தள முகவரிகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த காணொலிகளை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மத்தியில் திரையிட்டு போக்சோ சட்டம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுசார்ந்து தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இயக்குநரகத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.” இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Pocso Act School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment