தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை அக்டோபர் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் (மார்ச், ஏப்ரல் மாதங்கள்) பொதுத் தேர்வு நடைபெறும்.
அதன்படி, 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எந்த தேதியில் தொடங்கி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது, செய்முறைத் தேர்வு எப்போது நடைபெறுகிறது என்பது குறித்த அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி திங்கள் கிழமை கோவையிலிருந்து வெளியிட உள்ளார்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையின்பேரிலும், அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்கவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கோயம்புத்தூரில் வருகிற திங்கட்கிழமை (அக்டோபர் 14) காலை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“